அக்கரைப்பற்று மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் புதன்கிழமை மாநகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி மற்றும் மாநகர சபை செயலாளர், கணக்காளர், வைத்தியர் உள்ளிட்ட உத்தியோகதர்களும் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்று மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2021 டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைவாக, வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் இக்கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.
0 comments :
Post a Comment