பதுளையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை



துளை மாநகர சபை எல்லைக்குட்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில், பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய பதுளை நகர எல்லைக்குட்பட்ட 13 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதான வீதிகள், கடைகள், அரச நிறுவனங்கள் மற்றும் வீடுகளை ஆய்வு செய்தல், டெங்கு நுளம்பு பெருகும் பகுதிகளை ஆய்வு செய்தல் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், குறித்த இடங்களுக்கு உடனடியாக புகை அடித்தல், குப்பை கூளங்களை அகற்றுதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு அமைய அதிக ஆபத்துள்ள பகுதிகள், டெங்கு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் மற்றும் டெங்கு இல்லாத பகுதிகளில் என அடையாளம் காணப்பட்டுச் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை அட்டைகள் வழங்கப்படும்.

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம், பதுளை மாநகர சபை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பொலிஸ், இராணுவம், சிவில் பாதுகாப்பு மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் ஊழியர்கள் சுமார் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, பெகோ இயந்திரம், டிராக்டர் மற்றும் வாகனங்களின் மூலம் நகரத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பதுளை நகர மேயர் பிரியந்த அமரசிறி, பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், கிராம சேவகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :