நபீர் பவுண்டேஷன் மற்றும் ஈ.சி.எம். நிறுவனத்தின் அனுசரணையுடன் உபவேந்தர் பேராசிரியர் றமீஸுக்கு சாய்ந்தமருதில் கௌரவம்! (முழுமையான வீடியோ)



ண்மையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவியல் துறையின் முதன்நிலை பழைய மாணவரும், சாய்ந்தமருதில் இருந்து முதற்தடவையாக உபவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவருமான பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களை சொந்த ஊர் மக்கள் வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு கடந்த (18.11.2021) வியாழக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் தலைமையில் நடைபெற்றது.

செராண்டிப் இளைஞர் பவுண்டேஷனின் நெறிப்படுத்தலில் ஈஸ்டர்ன் காஸ்ட் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட், சம்மாந்துறை நபீர் பவுண்டேஷன் மற்றும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபம் ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  ஈ.சி.எம். நிறுவன பணிப்பாளர் திருமதி நாபீர் சகுணாஸ்,சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துள் கரீம், செயலாளர் அப்துல் மஜீத் ரோஷன் மரிக்கார் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எல்.எம். சலீம் (சர்கி) உட்பட உலமாக்கள், மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதம வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம். பாரூக், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடாதிபதி, பல்கலைக்கழக பதிவாளர் அப்துல் சத்தார், முதுநிலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், துறை தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.எம். சம்சுதீன், பிராந்திய பாடசாலை அதிபர்கள், கலை, இலக்கியவாதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு சொந்த ஊரில் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வுக்கு ஈ.சி.எம். நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்கள் பூரண அனுசரணை வழங்கியிருந்த அதேவேளை அவரது சார்பில் திருமதி நாபீர் சகுணாஸ் மற்றும் ஈ.சி.எம். நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :