கல்முனையில் முதியோர்களுக்கு குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்நிகழ்ச்சித்திட்டம்



றாசிக் நபாயிஸ்-
முதியோர் சமூக பாதுகாப்பு நிதியினூடாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 'வீடுகளில் வசிக்கும் முதியோர்களுக்கான குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்' மற்றும் 'கிராமிய முதியோர் சங்கங்களை வலுவூட்டல்' எனும் கருத்திட்டத்திற்கு அமைய கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கு கட்டில், மெத்தைகள் மற்றும் மூன்று கிராமிய முதியோர் சங்கங்களுக்கு தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆ.மதுசூதனன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

கல்முனைக்குடி பத்தாம் கிராம சேவகர் பிரிவில் உள்ள அல்-ஜஸீறா கிராமிய முதியோர் சங்கம், மருதமுனை மூன்றாம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மருதம் சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் மற்றும் நற்பிட்டிமுனை ஐந்தாம் கிராம சேவகர் பிரிவில் உள்ள அல்-அமீன் சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் போன்றவைகளுக்கு இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முதியோர்களுக்கான தேசிய செயலகப் பணிப்பாளர் கே.ஜீ.லெனரோல் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், நிருவாக உத்தியோகத்தர், எம்.என்.எம்.றம்ஸான், மாவட்டச் செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் சி.மகேஸ்வரன், முதியோர்களுக்கான தேசிய செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :