திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கற் சுற்றுப்போட்டித்தொடரின் சம்பியனாக கிண்ணியா பிரதேச செயலக அணியினர் தனதாக்கினர்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
2021 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கற் சுற்றுப்போட்டித்தொடரின் சம்பியனாக கிண்ணியா பிரதேச செயலக அணி தெரிவு செய்யப்பட்டது.

இன்று(20) திருகோணமலை (ஏகாம்பரம்) மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிண்ணியா பிரதேச செயலக அணி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக அணியை வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்ற இத்தொடரில் 12 அணிகள் கலந்து சிறப்பித்தன.

13 வது தடவையாக நடைபெற்ற அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கற்சுற்றுத்தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக கிண்ணியா பிரதேச செயலக அணியின் எம் .எப்.எம் . அஸ்மியும் , இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக அதே அணியின் ஏ.எச்.இஸ்மத்தும் அதேபோன்று தொடர் நாயகனாக எம்.ஏ.எம்.அம்மாறும் தெரிவுசெய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள வழங்கி வைத்தார்.

அடுத்த வருடம் 14வது மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான போட்டியை நடாத்த கோமரங்கடவல பிரதேச செயலக அணி தெரிவு செய்யப்பட்டதுடன் அதற்கான நினைவு சின்னத்தை மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ் .எம் .சி .சமரகோனிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ,மேலதிக அரசாங்க அதிபர் (காணி)பி.ஆர். ஜயரத்ன, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் ,பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :