ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரகிமு கங்கா" வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் கள விஜயமும் !



மாளிகைக்காடு நிருபர்-
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் "நிலைபேறான சூழலியல் முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின் கீழான ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரக்கிமு கங்கா" வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வும் கள விஜயமும் இறக்காமம் - 07 ஆம் கிராம சேவகர் பிரிவு ஆஷ்பத்திரிச் சேனையில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷானின் தலைமையில் புதன் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆறு மற்றும் ஆற்றுப் படுக்கைகளைப் பாதுகாப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக ஆற்றுப் படுக்கைகளில் மண் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஆற்றுப் படுக்கை ஓரங்களில் மரங்களை நடுவதன் ஊடாக ஆற்று வளங்களையும் மண் அரிப்பையும் பாதுகாக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. சூழலியல் முகாமைத்துவத்தை மேம்படுத்தி இயற்கை வழங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வேலைத் திட்டமானது மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் விஜயத்தில் இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்ஷார், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், இறக்காமம் - 07 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம். அத்தீக், இவ் வேலைத் திட்டத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.பி. யமீனா, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட சூழலியல் உத்தியோகத்தர்கள் அப்பிரதேச விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :