கருச்சிதைவு ஏன் ஏற்படுகின்றது ?
பலவகையான காரணங்கள் இருக்கின்றன, எனினும் அநேமான சந்தர்ப்பங்களில் எதனால் ஏற்பட்டது என்பதை விளக்க முடியாது.
கருச்சிதைவை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம்
1) முதல் 3 மாதங்களில் ஏற்படுபவை
a) 3/4 அல்லது 75% வரையான கருச்சிதைவுகள் முதல் 12 வாரங்களிலேயே ஏற்படுகின்றது.
b) பொதுவாக குறைபாடுடைய , வெளியில்வந்து வாழ முடியாதவகையில் தவறி உருவான கருக்கலே இவ்வாறு சிதைவுறுகின்றன .
Chromosome அல்லது நிறமூர்த்தம் DNA என்பது எமது உடலின் அடிப்படை கட்டமைப்பாகும். சிலவேலை கருக்கட்டும்போதுள்ள இயற்கையான தவறுகளால் ஏற்படும் கருக்கலே பொதுவாக சிதைவ்ய்ருகின்றன. இது மீண்டும் மீண்டும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. எனினும் தொடர்ந்து 3 அல்லது அதற்கு மேல் ஏற்படுமாயின் பரிசோதிக்க வேண்டும்.
எக்காரணங்கள் நேரடியாக தொடர்புடையன ?
1) வயது
a) வயது அதிகரிக்கும் போது கருச்சிதைவு ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கும்
1) 30 வயதைவிட குறைவானவர்களில்- 1/10
2) 35 - 39 - 2/10
3) 45 வயதைவிட அதிகமானவர்களில் - 50 வீதத்தைவிட அதிகம்
2) அதிக உடற்பருமன் - BMI > 30
3) புகைத்தல்
4) மதுஅருந்துதல்
5) அதிகளவு caffeine உள்ள பாணங்களை அருந்துதல்.
6) சில மருந்துவகைகள்
12 வாரங்களுக்கு முன்னர் ஒன்று அல்லது 2 கருச்சிதைவுகள் ஏற்படும் போது தாய் ஆரோக்கியமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எக்காரணத்தால் ஏற்பட்டது என பரிசீலித்தல் அத்தியாவசியமில்லை.
1/100 ஒருவருக்கு தொடர்ச்சியாக 3 கருச்சிதைவுகள் ஏற்படலாம். அவ்வாரான் சந்தர்ப்பங்களில் என்ன காரணத்தால் ஏற்படுகின்றது எனப்பரிசோதித்தல் அத்தியாவசியமானது
2. 12 வாரங்களின் பின்னர்
a) தாயில் உள்ள நோய்க்காரணங்களால் ஏற்படுகின்றதா என பரிசீலித்தல் அவசியம்.
b)
3. மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படல்
கர்ப்பகாலத்தில் மகப்பேற்றின் போது இரத்தப்போக்கை குறைக்கும் முகமாக இரத்தம் உ ரையும் தன்மை அதிகரிக்கும். சிலருக்கு சில நோய்க்காரணங்களால் இரத்தம் உரையும் வீத ஏற்கனவே அதிகரிடத்துக்காணப்படும். இவர்களில் placeta இல் இரத்தக்கட்டிகள் ஏற்பட்டு இரத்தோட்டம் குறைந்து குழந்தை 4-5 மாதங்களில் வயிற்றிலேயெ இரக்கும் நிலை ஏற்படலாம். அவ்வாறுள்ளவர்களில் இரத்தம் உ றைவதை தடுக்க மருந்துகள் எடுப்பது அத்தியாவசியம்.
கர்ப்பிணித்தாய் நீண்ட கால ரீதியில் பாதிக்க கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அவை சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாமலிருப்பின் அதனால் கருச்சிதைவு ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்
- சீனி நோய்/ Poorly controlled Diabetes
• அதி உயர் குருதியலுத்தம் / High blood pressure
• தைரொய்ட் நோய்
Infections
• Rubella
• Gonorrhoea
• Bacterial Vaginosis
•
சிலரின் கர்ப்பப்பை வித்தியாசமான வடிவில் அமைந்திருக்கலாம்
கர்ப்பப்பையின் கழுத்துப்பகுதியின் உறுதித்தன்மை குறைவாயிருத்தல். இவர்களில் 4-5 மாத அளவில் சிறுவலியுடன் குழந்தை கிடைக்கலாம், அல்லது நீர் வெளியேரலாம். இதைதடுக்கும் முகமாக அவ்வாறுள்ளவர்களில் கருப்பை கழுத்தை சூழ ஒரு தையல் இடுவதன் மூலம் இதனை குறைக்கலாம்
பின்வரும் காரணங்களால் கருச்சிதைவு அதிகரிக்காது
• மன அழுத்தம், கவலை
• வேலை செய்தல் , உடற்பயிற்சி செய்தல்
• உடலுறவு கொள்தல்
• விமானத்தில் பயணித்தல்
• உறைப்பான உணவுகள்
Dr. A.C.M.Musthaq
MBBS (Col) , MD (Obs & Gyn), MRCOG (UK)
0 comments :
Post a Comment