இலங்கை மின்சார சபையில் உள்ள தொழில்நுட்ப மற்றும் பொறியியல்துறை சாா்ந்த 12 தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பு 2 ல் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை செவ்வாய்க்கிழமை (14) நடாத்தினாா்கள்.
இவ் ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை மின்சார சபையின் பொறியியலாளா்களிடமிருந்து உச்ச பயனைப் பெறுதல், என்.வி.கியூ. தரச்சான்றிதழ் உள்ள அமைய ஊழியா்களை நிரந்தரமாக்குதல், 70 வீதமான பலசக்தித் திட்டத்தினை இலங்கையில் அமுல்படுத்துதல். அரசியல் ரீதியாக தொழிலாளா்கள் தற்காலிகமாக அரச நியமனங்களை நிறுத்துங்கள், சேவையாளா்களை அடிக்கடி இடமாற்றும் திட்டத்தினை நிறுத்துங்கள், ஊழியா்களது அடிப்படைக் கொடுப்பணவுகளை பதவிஉயா்வு சம்பள உயா்வு போன்றவற்றை ஒரு சிறந்த முறையான திட்டத்தின் ஊடாக அமுல்படுத்துங்கள், இலங்கை மின்சார சபையின் சொத்துக்கள் ,திட்டங்களை இரகசியமாக வெளிநாடுகளுக்கு கையளித்து கைச்சாத்திடுவதை ஒப்பந்தங்களை உடன் நிறுத்துங்கள் போன்ற 13க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இலங்கை மின்சார ஊழியா்கள் இணைந்து இவ் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனா்.
0 comments :
Post a Comment