காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரத்தினால் முன்னெடுத்து வரும் செயற்திட்டங்களில் ஒன்றான"வாழும் போதே வாழ்த்துவோம்-2021" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திறமையானவர்கள், சாதனையாளர்களை அவர்களது வாழ்விடம் சென்று வாழ்த்தி கெளரவித்து வரும் தொடரில் சனிக்கிழமை (12) கவிதை, இலக்கியம்,நடிப்பு என பல் துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென தனித்துவமான சிறப்பை பெற்றவரும் வரலாற்று பொக்கிசமான "காத்தான்குடியின் கண்ணிய மஸ்ஜிதுகள்" எனும் வரலாற்று நூலை எழுதி வரலாற்றில் அடையாளம் பெற்ற மூத்த கவிஞர் MIM.முஸ்தபா jp அவர்களது இல்லத்தில் வைத்து அவருக்கான கெளரவம் வழங்கப்பட்டது.
மூத்த கலைஞரும், கவிஞருமான கவிஞர் MIM.முஸ்தபா jp அவர்களை கெளரவிக்கும் இந் நிகழ்வில் கலாபூஷணம் மெளலவி காத்தான்குடி பெளஸ் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் காத்தான்குடி அறிவிப்பாளர்கள் போரத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட கெளரவ உறுப்பினர் மற்றும் கவிஞரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment