ESTEX ENGINEERING தனியார் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி அறிமுகப்படுத்தும் நிகழ்வும், நிறுவனத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
ESTEX ENGINEERING தனியார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஐ.முஹம்மட் சிஹான் தலைமையில் (18) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் புதல்வரும் தொழில் அதிபருமான அமான் அஷ்ரப் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
குறித்த நிறுவனத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றி இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமான் அஷ்ரபினால் அந் நிறுவனத்திற்கு ஒரு முழுமையான செயற்திட்டம் ஒன்றையும் கையளித்து வைத்து நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியையும் வழங்கி அறிமுகப்படுத்தி வைத்தார்.
0 comments :
Post a Comment