துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்ட கொள்கலன்களை விடுவிப்பதற்காக $25 Million ( சுமார் 600 கோடி ரூபா) வழங்குவதற்கு மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அரிசி , பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் கொள்கலன்களை விரைவாக விடுவிக்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை உள்ளடங்கிய பெருமளவு கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. அதனை விடுவிப்பதற்கு தேவையான டொலர்களை பெற்றுத் தருமாறு இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அதற்கான டொலர்களை பெற்றுக்கொடுப்பதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க தேவையான டொலர்களை விரைவாக பெற்றுக் கொடுத்தால் அத்தியாவசிய பொருட்களை மிக விரைவாக விடுவிக்க முடியும் என்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் அந்த டொலர்கள் பெற்றுக்கொடுக்கப்படுகிறது எனவும் எவ்வாறெனினும் அந்நிய செலாவணி தொடர்பான கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment