அம்பாறை பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் 30வது பொதுச்சபை கூட்டமும் பணிப்பாளர்கள் நியமனமும் !



நூருள் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை அம்பாறை பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் 30வது வருடாந்த பொதுச்சபை கூட்டம் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தலைவர் எஸ். லோகநாதனின் தலைமையில் இன்று (16) கல்முனையில் அமைந்துள்ள சமாச தலைமைகாரியாலயத்தில் நடைபெற்றது.

கடந்த கால கூட்டறிக்கைகள், கணக்கறிக்கைகள் வாசிக்கப்பட்டு சபையோரின் அனுமதி பெறப்பட்டதுடன் கடந்த காலங்களில் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் எதிர்நோக்கிய சவால்களை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிக்கொள்வது என்பது தொடர்பிலும், இலாபமீட்டும் அமைப்பாக கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தை மாற்றியமைத்து எதிர்காலத்தில் வினைத்திறனுடன் சங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் பல இதன்போது எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 09 பணிப்பாளர்களை பொதுச்சபையினர் தெரிவுசெய்ததுடன் கல்முனை அம்பாறை பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவராக எஸ். லோகநாதனும், உப தலைவராக ரீ . ரூபரனும், செயலாளராக என். மாணிக்க லட்சுமியும் பணிப்பாளர்களினால் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்கும் கல்முனை பிராந்திய உதவி கூட்டுறவு ஆணையாளர் பிரிவின் தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பரீட், சங்கங்களுக்கு பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். ரமேஷ்குமார், சங்கங்களின் கணக்காய்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கே. ஜெகதீசன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர். ராமகிருஷ்ணன், கல்முனை அம்பாறை பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பணிப்பாளர் சபையினர், பிராந்திய சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :