5 வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலரே அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ளன. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் முறையான நீண்ட கால திட்டங்கள் ஏதும் கிடையாது. டொலர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புக்களை ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டினோம். அவை தற்போது உண்மையாகியுள்ளது பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புபற்றி அறிந்து கொள்ளும் நிலையில் ஜனாதிபதி இல்லை. ஜனாதிபதியின் செயற்பாடுகள் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அதிகரித்துள்ளதே, தவிர குறையவில்லை என JVPயின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
JVPயின் செல்வத்தை தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்:-
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்களை விடுவிப்பதற்கும், மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தாலும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் போதுமான டொலர் கையிருப்பு இல்லாததால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் அரசாங்கத்திடம் கிடையவே கிடையாது.
டொலர் நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் புதிதாக தோற்றம் பெற்றுள்ளது. இம்மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் மாத்திரமே அரசாங்கத்திடம் உள்ளது. டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முறையான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
டொலர் பற்றாக்குறை காரணமாக பல பிரச்சினைகள் இன்னும் தீவிரமடைந்துள்ளன. எதிர்வரும் மாதம் முதல் 3 மாதத்திற்கான அத்தியாவசிய செலவுகளுக்காக மாத்திரம் சுமார் $6 Billion ( ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா) அவசியமாகும். மறுபுறம் பெருமளவான சர்வதேச கடன்களை அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது.
இம்மாதம் மாத்திரம் $350 Millionயையும் ( சுமார் எட்டாயிரம் கோடி ரூபா ) , எதிர்வரும் ஜனவரி மாதம் $500 Millionயையும் ( சுமார் 11 ஆயிரத்து 500 கோடி ரூபா) , ஜூன் மாதம் $1 Billionயையும் ( சுமார் 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ) அரசாங்கம் கடனாக செலுத்த வேண்டும்.
நாட்டின் வளங்களை வெளிநாட்டவருக்கு முதலீட்டு என்ற போர்வையில் வழங்கி அதனூடாக கடன்களை செலுத்தும் பொறுப்பற்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்படுகிறது.
மக்கள் வங்கி கடந்த செப்டெம்பர் மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 110 கோடி ரூபா பெறுமதியான கடன்பத்திரங்களையும், BOC கடந்த செப்டெம்பர் மாதம் 31ம் திகதி வரையாள காலப்பகுதியில் 130 கோடி ரூபா பெறுமதியான கடன் பத்திரங்களையும் விநியோகித்துள்ளன.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணி அனுப்புவதை குறைத்துள்ளார்கள்.2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மாத்திரம் $631 Million அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் $317 Million அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ளது. இவ் வருடத்தில் ஜுன் மாதம் தொடக்கம் கடந்த மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் ஊடாக கிடைக்கப் பெற்ற அந்நிய செலாவணி $1.226 Billion குறைவடைந்துள்ளன என்றார்.
0 comments :
Post a Comment