நுவரெலியா மாவட்டத்தில் இன்றைய தினம் எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் 5 பதிவாகியுள்ளது



க.கிஷாந்தன்-
நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் இன்று (07) மதியம் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு வெடித்ததால், கேஸ் அடுப்பு பலத்த சேதம் அடைந்தது.

இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் நுவரெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நானுஓயா எடின்புரோ தோட்டத்திலும், பூண்டுலோயா ஹெரோ தோட்டத்திலும், அட்டன் வெளிஓயா மேற்பிரிவு தோட்டத்திலும் இன்றைய தினம் (07) எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :