கத்தொட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை கையளித்தல் மற்றும் பயனாளிகள் 86 பேருக்கு வீடமைக்கும் உதவி மற்றும் வீட்டுக் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு



னாதிபதியின் கொள்கைக்கு ஏற்ப இந்த நாட்டின விவசாயத்தை முழுமையாக சேதனப் பசளை பயன்படுத்தும் பசுமை தொழில்நுட்பத்தை நோக்கி மாறுகின்ற பயணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தேசிய அபிவிருத்தி அதிகார சபையும் விவசாய அமைச்சும் இணைந்து 2022 ஆம் ஆண்டு வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நிகழ்ச்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

இதன்படி தேசிய அபிவிருத்தி அதிகார சபை “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக தற்போது 6 இலட்சம் ரூபாவை வழங்குவதிலிருந்து 6 ½ இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர்; குறிப்பிட்டார்.

கிராமிய வீடமைப்பு> நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சும் தேசிய அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து செயற்படுத்தி வரும் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவில் நிட்டம்புவ> கத்தொட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை கையளித்தல் மற்றும் பயனாளிகள் 86 பேருக்கு வீடமைக்கும் உதவி மற்றும் வீட்டுக் கடன் காசோலைகள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார். மேலும் இங்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் தென்னை மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

அமைச்சரவை அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி செயற்படுகின்ற இந்த வேலைத் திட்டம் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்ற வகையில் ஜனாதிபதி தனது “சுபீட்சத்தின் நோக்கு” தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக பசுமையான உலகை உருவாக்குவதற்காக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டுப் பொறுப்பாக ஏற்றுக் கொண்ட தமது கிராமிய வீடமைப்பு> மற்றும் நிர்மாணத்துறை கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சும் தனது திட்டத்திலுள்ள “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வேலைத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளின் கொல்லைப் புறத்தில் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத சேதனப் பசளை பயன்படுத்தும் வீட்டுத் தோட்டங்கள் ஊடாக பசுமையான உலகை நோக்கி பயணிக்கும் பயணத்தின் ஆரம்பத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ> அத்தனகல்ல பிரதேச சபை தலைவர் பிரியந்த புஷ்பகுமார உட்பட பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பலரும்; கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :