அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ”ஒரு வீட்டுக்கு ஒரு மரம்” விசேட மர நடுகை வேலைத்திட்டம்



ஏ.எல்.றியாஸ்-
ட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் வீடுகளில் பயன் தரும் மரங்களை நடும்பொருட்டு, அக்கழகம் ஒரு வீட்டுக்கு ஒரு மரம் எனும் தொனிப்பொருளில் விசேட மர நடுகை வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.

குறித்த மர நடுகை வேலைத்திட்டத்திற்கமைவாக, கழக உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கழகத்தின் முகாமையாளர் ஏ.எல்.றிம்சான் தலைமையில் அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் காரியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ், கழகத்தின் ஆலோசகரும், ஊடகவியலாளருமான ஏ.எல்.றியாஸ், உபதலைவர் எஸ்.எல்.முசம்மில், பொருளாளர் ஏ.ஆர்.எம்.றிம்சான் மற்றும் கழகத்தின் சிரேஷ்ட வீரர்கள் பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் 100 உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளுடன் சேதனப் பசளையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :