டிக்கோயா - வனராஜா குடியிருப்பில் சமையல் எரிவாயு அடுப்பில் தீ
அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று தீபற்றி எரிந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை காலை 06.30மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,குறித்த குடியிருப்பில் உள்ள பெண் அதிகாலை தேனீர் தயாரிப்பதற்காக அடுப்பை பற்றவைக்க முயன்ற போதே குறித்த கேஸ் அடுப்பு தீ பற்றி எரிந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் தீ பற்றி எரிந்த அடுப்பை அயலவர்களின் உதவியோடு தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதுடன்
மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment