நாவிதன்வெளி பிரதேச அறநெறி விழாவில் பதில் அரசாங்க அதிபர் ஜெகதீசன்!



வி.ரி.சகாதேவராஜா-
ந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நாவிதன்வெளி பிரதேசசெயலகம் இணைந்து நாடாத்தும் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் நேற்றுமுன்தினம் மத்தியமுகாமில் நடைபெற்றது.

அவ்விழாவில் அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதமஅதிதியாகக் கலந்துசிறப்பித்தார். பதில் அரசாங்க அதிபராக பதவியேற்றபின்னர் கலந்துகொண்ட முதலாவது விழா இதுவாகும்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக, பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுவருவது தெரிந்ததே.

அந்தவகையில், மத்தியமுகாம் - 05 ஶ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப்பாடசால நாவிதன்வெளி ஶ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதி சிவஶ்ரீ ஜெ.அரவிந்தன் குருக்கள் திருமுன்னிலை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமைவகித்தார்.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்கஅதிபர் வே.ஜெகதீசன் கலந்துசிறப்பித்தார்.சிறப்பு அதிதிகளாக நாவிதன்வெளி உதவிப்பிரதேசசெயலாளர் பே.பிரணவரூபன் ,அம்பாரை சிவனருள் பவுண்டேசன் செயலாளர் வே.வாமதேவன்,மற்றும் ஆலயதர்மகர்த்தாக்கள், சமூகசேவையாளர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்பினை மாவட்டசெயலக இந்துக்கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :