தென்கிழக்குப் பல்கலையில் மௌன எதிர்ப்புப் போராட்டம்!



ல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு வாக்குறுதி வழங்கி, இதுவரையும் அரசால் மறுக்கப்பட்டு வருகின்ற, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்விசார ஊழியர்கள், “மௌன எதிர்ப்புப் போராட்டம்” ஒன்றை முன்னெடுத்த இச்சந்தர்ப்பத்தில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திலும் அங்கு கடமைபுரியும் ஊழியர்களால் போராட்டம் ஒன்று 02.12.2021 பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

107% சம்பள அதிகரிப்பை வலியுறுத்தியும் சம்பள உயர்வு வழங்காததால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் ஓய்வூதியர்களின் அவலநிலை தொடர்பில், அரசாங்கத்துக்கு கவனயீர்ப்பை மேற்கொள்ளும் பொருட்டு, பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனங்களின், கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமையவே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பிரதான போராட்டம் ஒலுவில் வளாக நிர்வாக கட்டிடத்துக்கு முன்பாக இடம்பெற்றவேளை சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் பணிபுரியும் ஊழியர்களால் அங்குள்ள நிர்வாகக் கட்டிடத்துக்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :