மட்டக்களப்பு மாவட்ட தென்னை அபிவிருத்தி சபையினால் உள்நாட்டு தென்னை உற்பத்தியை அதிகரிக்க செய்யும் நோக்ககில் பயனாளிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்வு நேற்று (2) பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். அவர்களுடன் மாவட்ட தென்னை அபிவிருத்தி பிராந்திய முகாமையாளர் திருமதி ரவிராஜ், மாவட்ட விவசாய உதவிப்பணிப்பாளர் சித்திரவேல், விவசாய போதனாசிரியை திருமதி முர்சிதா மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment