ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப்பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி திணைக்களம் மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் சமுர்த்தி வாழ்வாதார உதவி வழங்கி வைக்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டம் நேற்று முன்தினம் (06) மீரிகமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு சுய தொழில் ஒன்றை செய்வதற்காக தையல் இயந்திரங்கள், இலத்திரனியல் தராசுகள் உட்பட பல உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, மீரிகமை பிரதேச சபை தவிசாளர் சனத் நந்தசிறி உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள், மீரிகமை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment