இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பல்கலைக்கழகத்தின் புத்தாக்க செயற் திட்டத்தில் ஒரு அங்கமாக உபவேந்தர் வழுகாட்டலில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் சாரதிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு நாள்
செயலமர்வு கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக மண்டபத்தில் ஊழியர்கள் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர். ஏ. ஜாஃபர் ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் சாரதிகளின் வேலையினை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கில் இந்த பயிற்சி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பயிற்சியின் போது வீதி வாகன ஒழுங்கு முறையும் விபத்துக்களைத்தடுத்தலும், சிறந்த போக்குவரத்து சேவையை ஏற்படுத்துதலும் பிரயாணிகளின் எதிர்பார்ப்பும், வீதிக் குறியீடுகளும் ஆரம்ப பொறிமுறைகளும், வாகனப் பராமரிப்பும் பொது சன உறவும் ஆகிய தலைப்புக்களில் விரிவுரைகள்நடாத்தப்பட்டது.
இந்த செயலமர்வுக்கு பிரதான விரிவுரையாளர் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதம வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம். பாரூக் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment