ஓக்ஸ்பேம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து
அக்கறைப்பற்றில் இயங்கி வரும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் சேர்ந்து கல்முனைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட
பெண் தொழில் முயற்சியாளரகளுக்கான நூல் சுற்றும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (23) பிரதேச செயலக ஸ்மார்ட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல். பாத்திமா சிபாயாவின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது. இதன்போது கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.பதியூத்தீன் நிர்வாகப்பிரிவு பிரதம முகாமைத்துவ உதவியாளர்,
திருமதி.எஸ்எஸ்.எம்.நௌபல், பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் திருமதி கே.தில்லையம்மா, பெண்கள் வெளிக்கள உதவியாளர், எம்.ஆர்.எஸ். நஸானா, அபிவிருத்தி உத்தியோகத்தர்
ஆர்.சகீகா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment