தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம். நிஜாம் தனது கலாநிதி பட்டப் படிப்பிற்காக (Doctor of Philosophy) அவுஸ்திரேலியாவில் தலை சிறந்த வர்த்தக பீடத்தை கொண்ட Queensland University of Technology (QUT) பல்கலைக் கழகத்திக்கு இன்று அதிகாலை பயணமானார்.
அவர் நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களை (Sustainable Development Agenda) அரசதுறையின் பாதீட்டு செய்முறைக்குள் உட்படுத்துவது தொடர்பில் தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளார். இவர் வர்த்தக முகாமைத்துவம் (BBA.Hons) மற்றும் சட்டம் (LLB) போன்ற இளமாணி பட்டங்களையும் வியாபார நிருவாகம் (MBA) மற்றும் பொது நிருவாகம் (MPM) ஆகிய முதுமாணி பட்டங்களையும் ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment