அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் சிறுவர் முன்பள்ளிகளுக்கு தொற்று நீக்கி வழங்கி வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஒஸ்போன் தமிழ் வித்தியாலத்தில் 05/12/2021 காலை இடம்பெற்ற இந் நிகழ்வில் கணபதி ,ஒஸ்போன், டங்கொல்ட்,சமர்வில்,கிளவட்டன் பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய அவர் பாடசாலைகளில் அரசியல் செய்வதை தவிக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கில்லை ஆனாலும் சமூக மாற்றத்தில் பாடசாலைகளின் பங்களிப்பு இன்றியதாதது என்ற வகையில் எனது சமூக பணியில் பாடசாலைகளுக்கு முக்கியத்தும் வழங்கி வருகின்றேன் என்னைப்பொறுத்தவரையில் சமூக சேவை என்பது அரசியல் பிரவேசத்தின் பின்னரானது அல்ல ஊடகத்துறையில் இருக்கும் போதே 2019 ஆம் ஆண்டு முதல் நோட்டன் வாசகர் வட்டம், எனது தந்தையின் இறப்பின் பின்னர் முத்துகிருஸ்ணன் நினைவுப்பேரவையின் என்பவற்றின் ஊடாக கலை, கலாசார,இலக்கியம் மற்றும் கல்வித்துறைகளை உக்குவிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து செய்துவருகிறேன் அதன் பின்னராக பிரதேசசபை உறுப்பிராக தெரிவானதன் பின்னர் பிரதேசசபை உறுப்பினர் என்ற வரையறைக்கு குறுகிய காலத்திற்குள் அதிகளவான அபிவிருத்தி திட்டங்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலுக்கமைய சமர்வில் வட்டாரத்தில் முன்னெடுத்துள்ளேன் அரசியல்வாதி என்றால் ரிப்பன் வெட்டுவது மட்டும் பணியல்ல மாறாக கலை,கலாசாரம், விளையாட்டு,கல்வி, ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எனது நோக்கம் அந்த வகையில் கடந்த காலங்களில் சமர்வில் வட்டாரத்திலுள்ள சகல முன்பள்ளிகளுக்கும் கற்றல் உபகரணங்களும், பாடசாகளுக்கு சுகாதார மேப்பாட்டு திட்டத்தினூடாக மலசலகூடம் அமைத்துக்கொடுக்கப்பட்டதுடன் பிரதேசத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் வாசிகசாலைகளுக்கு வாசிப்பு ப நூல்கள் கையளிக்கப்பட்டதுடன் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கருத்தரங்குகள், சித்திபெற்ற மாணர்களுக்கு சான்றிதழ்களும் வங்கப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து எனது அரசியல் பணியை முன்னெடுக்கவும் எனது சமூக சேவையை தொடர்ந்து முன்னெடுக்கவும் கல்விச்சமுகத்திடமிருந்து ஆரோக்கியமான விமர்சணங்களை எதிர்பார்கிறேன் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment