பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல் 16 நாள் செயற்பாட்டின் ஒரு பகுதியாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் நடைபவணியொன்று இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று (04) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவணியானது குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தை சென்றடைந்தது. பெண்களை பாதுகாப்போம், உலக வேலைத் தளங்களில் பாலியல் வன்முறைகளை முடிவுறுத்தல், பெண்களுக்கான சமத்துவத்தை பெற்றுக் கொடுப்போம், பெண்கள் மீதான வன்முறைகளுக்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படவேண்டும், பெண்கள் மீதான வன்முறைகள் சிறப்பு நீதிமன்றங்கள் ஊடாக விசாரனை செய்யப்பட வேண்டும் உட்பட பல வாசகங்களை உள்ளடக்கிய வகைதில் பதாகைகளை ஏந்தியவாறு நடை பவணியாக தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதி ஊடாக சென்றனர்.
உலகளாவிய ரீதியில் பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதனையும் அவர்களை பாதுகாப்பதனை உறுதி செய்யும் வகையிலும் உலக மக்களை வலுவூட்டும் செயற் திட்டமாக ஆண்டு தோரும் கார்த்திகை மாதம் 25 ம் திகதியிலிருந்து மார்கழி 10 வரை 16 நாட்கள் பெண்களின் ஆதரவுக்கான அணிதிரட்டும் காலமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தகைய காலப் பகுதியில் பெண்களின் நலன்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,பிரச்சினைகள் உரிமை மீறல்களை உலகரியச் செய்யும் நோக்கில் இத் தினங்கள் காணப்படுகிறது.
இத்தினத்தினை நினைவு கூறும் முகமாக இவ்வாறான விழிப்புணர்வு நடை பவணி இடம் பெற்று வருகின்றது பெண்களின் உரிமைகள் சிறுவர்களை மேம்படுத்தும் நோக்குடன் இந்த செயற்பாடு அமையப் பெற்றுள்ளது .மூதூர், வெருகல்,குச்சவெளி உள்ளிட்ட இடங்களிலும் இவ்வாறான திட்டம் முன்னர் நடை முறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் இதன் போது குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் இடம் பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் மேடைகளை அலங்கரித்தன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி,திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார்,செயலாளர் ஊர்மிலா மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி,பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் நஸ்ரின் டிலானி,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரியால் உட்பட மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment