வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கடந்த 2020 இல் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்று அகில இலங்கை ரீதியாக Top – 10 இற்குள் தெரிவு செய்யப்பட்டு முதன்மை நிலை பெற்ற மாணவன் முகம்மது அன்வர் ஜாவித் அப்தரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (2) இடம்பெற்றது.
திறமைகளையும், சாதனைகளையும் பாராட்டுவோம் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாதனை நிலை நாட்டிய மாணவனை வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முன்பாக இருந்து பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு ஊர்வலமாக பாடசாலை பிரதான மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம். உமர் மௌலானாவும், ஏனைய அதிதிகளாக, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஜே.எப்.றிப்கா, வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆகியோர் கலந்து கொணடனர்.
0 comments :
Post a Comment