இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழில்நுட்பவியல் மையம் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பான' அம்பாரை மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் கூட்ட மண்டபத்தில் (08) பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ. முகம்மட் தாரீக் தலைமையில் நடைபெற்றது.
இப்பிராந்தியத்தில் கடற்றொழில் மீன்பிடியை நிரந்தர வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்ற மீனவர் சமூகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடுகின்ற நிகழ்வாக இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்து.
இதற்கமைவாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்ற சந்தர்ப்பதில் அங்கு ஏற்படுகின்ற ஆபத்துகளில் இருந்து மீள்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இது தொடர்பான போதியளவு பயிற்சிகள் இல்லாததினால் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் இங்கு சுற்றிக்காட்டினார்கள்.
கடற்றொழில் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான இப்பிரச்சனைகளுக்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துயாடிய பின்னர் சாதகமான முடிவுகள் மெற்கொள்ளப்படும் என அதிகாரிகளினால் இங்கு தெரிவிக்கப்பட்டுத என்புத குறிப்பபிடத்தக்கது
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ், அம்பாறை மாவட்ட அனர்த்த மத்திய நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ், பல்கலைக்கழக தொழி;ல்நுட்பவியல் பீடத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பவியல் திணைக்களத் தலைவர் றிப்தி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.முனிப், உட்பட மீன்பிடி திணைக்களத்தின் அதிகரிகளும கலந்த கொண்டனர்.
0 comments :
Post a Comment