அன்றைய சுனாமியும் இன்றைய சுமையும்
+++++
Mohamed Nizous
அன்று
அலை எழும்பி
அழித்து விட்டுப் போனது
இன்று
விலை எழும்பி
வழித்து விட்டுப் போகிறது
அன்று
கடல் வந்து
காவு கொண்டது
இன்று
கடன் வந்து
நோவு தந்தது
அன்று
அலை நுரையால்
சோலைகள் அழிந்தன
இன்று
நுரைச் சோலையால்
மின்
அலைகள்
அழிகின்றன
அன்று
உயிர் இறந்து போனது
இன்று
பயிர் இறந்து போகிறது
அன்று
தோழர் பிரிந்து போக
நெஞ்சம் வெடித்தது
இன்று
டாலர் குறைந்து போக
பஞ்சம் வெடிக்கிறது
அந்த வலி நினைத்து
விழி நனைகிறது
இந்த வலி மாற
வழி தேடுகிறது
இதயம்
0 comments :
Post a Comment