ஏறாவூர் ஐயங்கேணி கிராம சேவகர் பிரிவில் காணப்படும் தோணாவில் நீர் மட்டம் அதிகரிப்பு அண்மித்த பகுதி மக்கள் இடம்பெயர்வு



புன்னக்குடா வீதி அபிவிருத்திக்காக நீர் வழிந்தோடும் பாலங்கள் மறிக்கப்பட்டு பாலங்கள் புணர்நிர்மானம் செய்யப்படுவதனால் ஐயங்கேணி தோணாக்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது இதனால் அண்மித்து வாழுகின்ற பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு ஐயங்கேணி கிராம சேவையாளர் காரியாலயம் சலாம் பாலர் பாடசாலை தாதியர் காரியாலயம் என்பன தற்காலிகமாம மூடப்பட்டுள்ளது அத்தோடு அத்தோணாக்களில் முதலைகள் காணப்படுவதால் முதலைகள் மக்கள் குடியிருப்புக்குள் நடமாடுவததையும் அவதானிக்க முடிகின்றது மீண்டும் மழை பெய்யுமாக இருந்தால் ஐயங்கேணியில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு நீர் வழிந்தோட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஐயங்கேணி முஸ்லிம் கிராம அபிவிருத்தி சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளரின்கவனத்துக்கு "தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்"




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :