தன்ஸீம் றஹ்மத்துல்லாஹ் எழுதிய "இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை" நூல் வெளிவந்தது.







நூருல் ஹுதா உமர்-
லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவன் மாளிகைக்காடு தன்ஸீம் றஹ்மத்துல்லாஹ் எழுதிய "இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை" எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (05) மாலை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அரங்கில் கிழக்கு இளைஞா்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். தெளபீக் (நளீமி)யின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில், பேராசிரியர் எம்.ஜ.எம். கலீல், கலாநிதி எஸ்.எம். ஜயூப், அரசியல் துறைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பெளஸர், இக்றா நிறுவன பணிப்பாளா் யூ. சத்தார், விரிவுரையாளர் என். லும்னா ஷாபி, பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

"இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை" எனும் நூலனது நடைமுறைக்கு சாத்தியமான பல்வேறு விடயங்களை விமர்சன ரீதியாக நோக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்நூல் பிரதான 08 தலைப்புக்களை மையமாக வைத்து 68 பக்கங்களை கொண்டது என நூல் திறனாய்வு செய்த கல்விமான்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :