சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளோம். என்னை விபுலபுரி மக்கள் பிரதேச சபை உறுப்பினராக காரைதீவு பிரதேச சபைக்கு அனுப்பி அழகு பார்த்ததன் நம்பிக்கையை இன்று மீளவும் உறுதிப்படுத்தி பழம்பெரும் கிராமமான காரைதீவு தன்மானத் தமிழர்களின் இருப்பை உறுதி செய்துள்ளேன்.
இவ்வாறு நேற்று இடம்பெற்ற காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படுவதில் பக்கபலமாக நின்று செயற்பட்ட மீன்சின்ன சுயேட்சை குழுவின் உறுப்பினர் சதாசிவம் சசிகுமார் தெரிவித்தார்..
தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதந்திரக்கட்சி ஐ.தே.கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் போட்டியிட்டும் 2018 ல் இடம் பெற்ற தேர்தலின் மூலமாக சுழற்சி முறை ஆசனத்தை பெற்றுக் கொண்ட நான் கட்சி பேதம் மறந்து எமது கிராமத்தின் தனித்துவம் கருதி எந்த வித சோரம் போதலுக்கும் இடம் கொடுக்காது என்னை வழிநடத்திய சுயேட்சை குழுவின் ஸ்தாபகர்களின் ஒழுங்கான வழிநடத்தலின் கீழ் கட்டுப்பட்டு எமது மக்களின் நன்மை கருதி இந்த 2022ம் ஆண்டின் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்து நியாயத்தின் வழியில் நடந்துள்ளேன்.
இந்த நிகழ்வில் எத்தனையோ இடர்கள் ஏற்பட்ட போதும் எந்த காழ்ப்புணர்ச்சியோ பழிவாங்கும் உணர்வும் அற்று செயற்பட்டும் உள்ளேன். எனது சக உறுப்பினர் குமாரசிறி பிழையான வழிநடத்தலின் கீழ் செயற்பட்டு தர்மத்தின் நெறி முறையியை மீறி இன்று தனிமரமாக்கப்பட்டுள்ளார்.
ஊர்க்கட்டுப்பாட்டை மீறி துரோகமிழைத்துள்ளார்.
'தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்' என்பார்கள். எனவே எமது நோக்கமான மண்ணுக்கும் மக்களுக்கும் இறுதிவரை விசுவாசமாக நடக்கவேண்டும் என்ற சிந்தனைக்கமைவாக எமது பயணம் தொடரும். என்றார்.
0 comments :
Post a Comment