சமாதானப் பேரவையினால் இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான சமூகமட்டக் குழுக்களின் திறன்களை மேம்படுத்தும் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.
கடந்த 12.12.2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள கிரீன் கார்டன் ஹோட்டலில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மட்ட சர்வமதப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மட்ட சர்வமதப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட தகவல் தொடர்பு பயிற்சி மையத்தின் (CCT) தலைமைச் செயற்பாட்டு அதிகாரியும் வளவாளருமான பொன்.பேரின்பநாயகம் ஏற்பாட்டில் செயற்றிட்ட முகாமையாளர் நயாஜ் சம்சுதீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சிரேஷ்ட செயற்றிட்ட உத்தியோகத்தர் அமில மதுசங்க அவர்களும் பேரவையின் வளவாளர்களான பிர்தெளஸ் (நளிமி), வி.பிரபாகரன், எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் ஆகியோரும் விரிவுகளை வளங்கினர்.
இச்செயற்றிட்டம் ஐரோப்பிய யூனியனினால் இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், இலங்கையில் ஹெல்விடாஸ் ஸ்ரீலங்காவின் மேற்பார்வையின் கீழ் தேசிய சமாதானப் பேரவையினால் ஆறு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment