பென்னி அப்பீல் அவுஸ்திரேலிய நிறுவன நிதி உதவியில் அநாதைகள் மற்றும் பாதிக்கப்பட்ட வறிய சிறார்களின் குடும்பங்களுக்கான 25 நிரந்தர வீடுகளை அமைக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை (17) இரு மாதிரி வீடுகளை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு குச்சவெளி பிரதேச செயலக செந்தூர் கிராம சேவகர் பிரிவில் புடவைக்கட்டு பிரதேசத்தில் பிரதேச செயலாளர் திரு.குணநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் குளோபல் வன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பளர் திரு எம்.எம்.அன்சாரி, செயலாளர் ஐனுல் ஷாமிளா மற்றும் பிரதேச செயலாளர் திரு. கு. குணநாதன்,திரியாய் வட்டார உறுப்பினர் திரு.ரிசாத்,சர்வ மத தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment