திருகோணமலை_குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கொவிட் காரணமாக தினக்கூலி தொழில் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலையில் இயங்கி வரும் லீட்ஸ் நிறுவனம் ஊடாக சீபிஎல் கிரேன்ட்2 நிறுவன நிதி அனுசரனையில் இன்று (05) வழங்கி வைக்கப்பட்டன. தலா 3499.50 ரூபா பெறுமதியான 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. நிலாவெளி,கோபாலபுரம்,கும்புறுப் பிட்டி வடக்கு,கும்புறுப் பிட்டி தெற்கு,புல்மோட்டை போன்ற கிராமங்களுக்கு பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் லீட்ஸ் நிறுவன மாவட்ட முகாமையாளர் ஜெயராஜ் மற்றும் திட்ட உத்தியோகத்தர் தஸ்லீம் உள்ளிட்ட பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment