பகிரங்க விவாதத்துக்கு இருதரப்பும் தயார் நிலையில்



தங்களால் உத்தேசிக்கப்பட்ட பகிரங்க விவாதத்திற்கான திகதியை ஏற்றுக் கொள்ளல்

நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,
தீர்வு நிகழ்ச்சி,
வசந்தம் தொலைக்காட்சி,
கொழும்பு.

ட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு கபளீகரம் செய்யப்பட்ட விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் என்னால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் அவர்கள் கூறிய கருத்து தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு அவரை அழைத்திருந்தேன்.அதற்கு அவரும் சம்மதித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு (2021.12.15) உங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறுஞ்செய்தி மட்டும் வட்சப் செய்தியில் விவாதத்திற்கான திகதியை இம்மாதம் 29ல் உறுதிப்படுத்துமாறு எம்மிருவருக்கும் முகவரியிட்டு அனுப்பியிருந்தீர்கள் அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். (கௌரவ நசீர் அஹமட் MP, கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் MP, மட்டக்களப்பு மாவட்ட காணி சம்பந்தமான விவாதத்தில் தாங்கள் இருவரும் தயாராக இருப்பதாக நாம் ஊடக வாயிலாக அறிகின்றோம். இந்த விவாத நிகழ்ச்சியை எங்களுடைய வசந்தம் தொலைக்காட்சியின் புதன்கிழமைகளில் இடம்பெறும் தீர்வு எனும் நிகழ்ச்சியில் நடாத்துவதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். எதிர்வரும் 29ஆம் திகதி டிசம்பர் மாதம் உங்களுக்கு பொருத்தமானதாக இருந்தால் அறியத்தந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். தங்கள் உண்மையுள்ள, நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தீர்வு நிகழ்ச்சி, வசந்தம் தொலைக்காட்சி)

உங்களது தேசிய தொலைக்காட்சியான வசந்தத்தின் அரசியல் நிகழ்ச்சியான தீர்வினை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல இலட்சக்கணக்கான தமிழ் பேசும் நேயர்கள் பார்வையிடுகின்றனர் .

எனவே எமது இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதத்திற்கு உங்களால் உத்தேசிக்கப்பட்ட திகதியில் என்னால் சமூகம் கொடுக்க முடியும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Z.A. நசீர் அகமட் (பொறியியலாளர்)
பாராளுமன்ற உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்டம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :