கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - மக்கள் சிரமம்



க.கிஷாந்தன்-
லையக தோட்டங்களில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையக பெருந்தோட்ட நகரங்கள் மற்றும் தோட்டப்புற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் உணவகங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கேஸ் நிலையங்களுக்குச் சென்று எரிவாயு கொள்வனவு செய்ய முடியாமல் வெறுங்கையுடன் சுற்ற வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் சரியான சமையல் எரிவாயு முறை இல்லாத காரணத்தால் தாம் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :