அரச தொலைக்காட்சி விருது பெற்றார் ஷியாமா யாக்கூப்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளரான ஷியாமா யாக்கூப் அரச தொலைக்காட்சி விருது" வழங்கி கௌரவிப்பட்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளரான ஷியாமா யாக்கூப் தயாரித்து நெறிப்படுத்தி ஐ அலை வரிசையில் ஒளிபரப்பான Tears of Ocean (கடல் விடும் கண்ணீர்) என்ற தொலைக்காட்சி ஆங்கில விவரண நிகழ்ச்சி 2020 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விவரண நிகழ்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு, அதன் தயாரிப்பாளரும் நெறியாளருமான ஷியாமா யாக்கூபிற்கு இலங்கை அரசின் உயர் விருதான "அரச தொலைக்காட்சி விருது" வழங்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் திகதி மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த 37 வருடங்களாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சிரேஷ்ட தயாரிப்பாராக பணியாற்றி வரும் ஷியாமா யாக்கூப், கல்வி நிகழ்ச்சிகள், மகளிர் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், விவரண நிகழ்ச்சிகள், விஷேட நேரடி ஒளிபரப்புகள் போன்றவற்றை மூன்று மொழிகளிலும் நெறிப்படுத்தி வருகின்றார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளை தயாரித்துள்ள இவர், ஜப்பானிய NHK ஒளிபரப்பு நிலையத்தில் நான்கு மாத காலம் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பும் நவீன தொழில் நுட்பமும் என்ற விசேட பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாத்தளை நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷியாமா யாக்கூப், இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் 37 வருடங்கள் தொடர்ச்சியாக அத்துறையில் சிரேஷ்ட தயாரிப்பாளராக பணியாற்றி வரும் ஒரேயொரு தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கணவரான யூ. எல். யாக்கூப் அதே தேசிய தொலைக்காட்சி நிலையத்தில் சிரேஷ்ட உயர் நிலை பதவியில் கடமையாற்றி வருவதும் சிறப்பம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :