உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இயங்கும் எகெட் திட்டத்தின் ஊடாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் கலை, கலாசார பீடத்தின் சிறப்பு மாணவர்களுக்கான ' ஆளுமை விருத்தி ' எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு பீடத்தின் கேட்போர் கூடத்தில் கலை,கலாசார பீடத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை திணைக்களத் தலைவரும், கலை, கலாசார பீடத்தின் எகெட் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான சிரேஷ்ட விரிவுரையாளர் பி.எம்.எம். மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
தம்புள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் டாக்டர் எம்.ரி.எம்.அலவி மற்றும் நிதியமைச்சின் தேசிய உளவள மத்திய நிலயத்தின் சிரேஷ்ட உளவியல் உளவளத்துணை ஆலேசகர் ஏ. மனூஸ்; ஆகியோர்களால் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.
பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவ சமூகம், சமூகத்துடன் இணையும் போது எவ்வாறு தங்களது ஆளுமைகளை வளர்த்துக் கொள்வது தொடர்பான ஆளுமை விருத்திக்கான முக்கியத்துவம் வாய்ந்த செயலமர்வாகவே இது ஒழுங்கு செய்யபப்ட்டது என இப்பயிற்சி செயலமர்வின் ஒருங்கிணைப்பாளர் என்.சுபராஜ் தெரிவித்தார். இங்கு களச் செயற்பாடுகளுடன் அறிவுத் திறன் பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செயலமர்வின் இறுதியில் கலந்து கொண்டோர்களுக்கான சான்றிதழ்களும்; வழங்கி வைக்கப்பட்டது.
இச்செயலமர்வின் ஆரம்ப நிகழ்விலும் சான்றிதழ் வழங்கும் இறுதி நிகழ்விலும் பிரதம அதிதியாக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸீல் கலந்து கொண்டதுடன் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment