விறகு அடுப்பில் சமைத்துப் பார்!
++++++
Mohamed Nizous
உன்னைச் சுற்றி புகை வட்டம்
தோன்றும்
உடல் கறுத்துப் போகும்
மைத்திரியின் அருமை விளங்கும்
உனக்கும் கடுப்பு வரும்!
கையிரண்டில் கரி படும்
பார்சல் விற்பவனில் பாசம் வரும்
உன் கழுத்தைத் தேய்த்தே
ஓரப் புடவை ஊத்தையாகும்
கண்ணிரண்டும் கலங்கும்
விறகடுப்பில் சமைத்துப் பார்!
நெப்கினை நனைப்பாய்
மூக்கை முன்னூறு தடவை துடைப்பாய்
கேஸ் இருந்தால், நிமிசத்தில்
சமையல் என்பாய்
கொள்ளி அடிப்பில்
கொதி தண்ணியும்
அதி சிரமம் என்பாய்
காக்காமார் கூட நின்று
கரிச் சட்டி
கழுவ் வேண்டும என்பாய் -
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லாப் புகை
ஊடுருவக் காண்பாய்!
இந்த நெருப்பெட்டி, இந்த கல்லு, இந்த
சிரட்டை, இந்த சட்டி - எல்லாம்
ஆட்சியின் அழகு என்பாய்
விறகடுப்பில் சமைத்துப் பார்!
இருமல் இடைக்கிடை
எரிச்சலில் ஒலிக்கும்
எரியாத விறகில்
இலாம்பெண்ணை
இறைக்கப்படும்
வியர்வை நைல் நதியாய்
பெருக்கெடுக்கும்
உதடுகள் லிட்ரோக்கு
உரக்க ஏசும்
பாத்திரங்களின்
பளபளப்பு போகும்
விறகடுப்பில் சமைத்துப் பார்!
சிரட்டைகளிள் ஊதி ஊதியே
சினம் கொள்ள உன்னால்
முடியுமா?
நெருப்புக்காக
நெருப்பாய் மாறியதுண்டா?
கவலையில்லாக்
கண்ணீரை கண்டதுண்டா?
புகைக்குள்ளே உன்னைப்
புதைக்கத்தெரியுமா?
கூடிய விலையில் வாங்கிய
குக்கர் இருந்தும்
அடுப்படியில் கடுப்படையும்
அனுபவம் உண்டா?
விறகடுப்பில் சமைத்துப் பார்!
சின்னச் சின்னச் சொறிச்சல்களில்
சிலிர்க்க முடியுமே!
அதற்காக வேணும்..
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க
முடியுமே!
அதற்காக வேணும்..
வீண் என்ற சொல்லுக்கும்
வெங்காயம் என்ற சொல்லுக்கும்
ஆட்சியும்
அமைச்சரும் ஞாபகம் வருமே
அதற்காக வேணும்..
ஆக்கிக் கொண்டே ஏசவும்
முடியும்
ஏசிக் கொண்டே ஆக்கவும்
முடியுமே
அதற்காக வேணும்..
விறகடுப்பில் சமைத்துப் பார்!
தீய்ந்த சோறு
காய்ந்த சுண்டல்
இரண்டில் ஒன்று
இருக்கும் நிச்சயம்
விறகடுப்பில் சமைத்துப் பார்!
ReplyForward
0 comments :
Post a Comment