தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஐக்கிய இளைஞர் சக்தி நடாத்தும் மாபெரும் இலவச 𝗖𝗖𝗧𝗩 𝗖𝗮𝗺𝗲𝗿𝗮 𝗜𝗻𝘀𝘁𝗮𝗹𝗹𝗮𝘁𝗶𝗼𝗻
ஒருநாள் இலவச பயிற்சி நெறி எதிர்வரும் புதன்கிழமை (15) கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மடின் ஏற்பாட்டில், காலை 9.00 தொடக்கம் மாலை 5.00 வரை ஒருநாள் நிகழ்வாக இடம்பெறும் இந்தப் பயிற்சி நெறி முடிவில், நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பவர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் முன்கூட்டியே உங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை 0758688888 அல்லது 0703750044 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment