அரசாங்கத்தின் சுபிட்ஷத்தின் நோக்கு சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் 300 பயனாளிகளுக்கு விவசாய உள்ளீட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வும், கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் மனைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 39 பயனாளிகளுக்கு விவசாய உள்ளீட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று ஏறாவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைவர் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் உதவி திட்டமிடல் அதிகாரி சிஹானா, முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.ஐ. தஸ்லிம், விவசாய உதவிப்பணிப்பாளர் சித்திரவேல், விவசாய போதனாசிரியை திருமதி முர்சிதா மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment