திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் "பாடசாலைப் பங்கேற்புடன் கூடிய கல்வி அபிவிருத்தி "தொடர்பிலான பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (21) இடம் பெற்றது. குறித்த பாடசாலையின் வளாகத்தில் இந் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
முஸ்லிம் எயிட் நிறுவனம் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது கல்வி அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு பெற்றார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிண்ணியா தாருல் உலூம் மகாவித்தியாலயம், கிண்ணிபயா காக்கா முனை ஆண்கள் முஸ்லிம் கலவன் பாடசாலை, கிண்ணியா அல் அமீன் வித்தியாலயம், கிண்ணியா ஆலங்கேணி விநாயகர் மகாவித்தியாலயம், கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயம் பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் ஆயிரம் மாணவர்களின் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் அவர்களுக்கான பெற்றோர்களின் கண்காணிப்பு தொடர்பிலும் இதில் பேசப்பட்டது .பெற்றார்களுடைய ஊக்குவிப்புப் கல்வி வளர்ச்சிக்கு அவர்களை மேலும் வலுவூட்டச் செய்கிறது உள்ளிட்ட விடயங்கள் வளவாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த செயலமர்வுக்கு வளவாளர்களாக ஓய்வு நிலை அதிபர் எம்.பி.எம்.முஸ்தபா,ஓய்வு நிலை ஆசிரியர் ஏ.டபிள்யூ.முஹ்சீன் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.நசூகர்கான், பிரதி கல்வி பணிப்பாளர் எம்.சி.நசார், ஆலோசனை மற்றும் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா,முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் முகாமையாளர் நாதியா ஹமீட், மாவட்ட இணைப்பாளர் டீ.சலீம், வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.ஜீ.எம்.பஹீ உட்பட அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment