ஞஜசிறாஜிய்யா அரபுக் கல்லூரியின் இஸ்லாமிய உயர் கற்கை நெறி மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சையில் வெற்றி பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.எம்..நசீர் (ஜமாலி) அவர்களின் தலைமையில் ( 4 ) சிராஜிய்யா அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது.
சாதனையாளர்களை கௌரவிக்கும் இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.நஸூஹர்கான் (நளீமி), கௌரவ அதிதியாக இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் அறபுமொழி பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திருகோணமலை மாவட்ட கிளை தலைவருமாகிய கலாநிதி ஏ.ஆர்.நஸார் (பலாஹி) , விசேட அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முள்ளிப்பொத்தானை கிளை தலைவர் அஷ்-ஷெய்க் என்.சபீக் (ஸஹ்ரி) , திருகோணமலை மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எச்.தாலிப் அலி, பாடசாலை அதிபர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment