பனம் விதைகள் நடுவதன் ஊடாக இயற்கை வள நிலக்கீழ் நீரினை பாதுகாக்கலாம்-கஜேந்திரன் எம்.பி



பாறுக் ஷிஹான்-
னம் விதைகள் நடுவதன் ஊடாக இயற்கை வள நிலக்கீழ் நீரினை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்காக வளங்களை உருவாக்கி கையளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

வடக்கு கிழக்கில் பல்வேறு சமூக அமைப்புகள் மர நடுகை திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்கள்.நாங்களும் தொடர்ச்சியாக மர நடுகை திட்டங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றோம்.அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மர நடுகை திட்டங்கள் இடம்பெற்று கொண்டு இருக்கின்றது.யாழ் மாவட்டம் இருந்து அம்பாறை மாவட்டம் வரையுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த மர நடுகை செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் 1 இலட்சம் பனைவிதைகள் நடும் செயற்பாடு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.அம்பாறையிலும் கணிசமான பனைவிதைகள் நாட்டப்பட்டுள்ளன.எங்கள் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வாறான பனம் விதைகள் நடுவதன் ஊடாக எமது தேசத்தின் இயற்கை வளத்தினை பாதுகாப்பதும் நிலக்கீழ் நீரினையும் பாதுகாப்பது போன்ற வேலைத்திட்டங்களையும் எதிர்கால சந்ததியினருக்காக இந்த வளங்களை உருவாக்கி கையளிக்க வேண்டும் என்பதற்காகவே செயற்படுத்தப்படுகின்றது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :