பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் புதிய காவல் நிலையம் வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை



பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ-
டலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களுக்காக முழுநேர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் வகையிலும் புதிய காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் இவ்விரண்டு பகுதிகளும் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் என்பதாலும், பைபாஸ், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் மற்றும் தச்சக்காடு வழிகளில் போக்குவரத்து அதிகமாகிவிட்டதாலும், மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெருகி விட்டதாலும் புதிய காவல் நிலையத்தின் தேவை மிகவும் அவசியம்.

பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை மற்றும் புவனகிரி ஆகிய சிதம்பரம் உட்கோட்ட காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட தாய் கிராமங்களையும், குக்கிராமங்களையும் உள்ளடக்கி இந்த காவல்நிலையம் செயல்பட வேண்டும்.

எனவே, இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறையாக திகழும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடிப் பார்வையில் இயங்கும் தமிழ்நாடு காவல்துறை இந்த புதிய காவல் நிலையத்தை உருவாக்க முழு முயற்சி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :