சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது
கல்முனை பிரதேச மட்ட வலது குறைந்தோர் ஒழுங்கமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று (08) இடம்பெற்றது .
சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககான தேசிய செயற்ப்பாட்டு திட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாரு குறித்த விழிப்புணர்வு இடம்பெற்றது . மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலாளர்
ஜே. லியாகத் அலி அவர்களிடம் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை
கையளித்தனர்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் குடுத்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment