பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடியில் உயர்தர கலைப்பிரிவு
மாணவர்களுக்கான பரதநாட்டியம் பாடத்துக்கான
செயலமர்வு இன்று இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் திரு.எம்.சபேஸ்குமார் அவர்களின் வழிகாட்டலில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை அதிகரிக்கும் நோக்கில் கலைப்பிரிவு பகுதித்தலைவர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியரின்
நெறிப்படுத்தலிலும் இச்செயலமர்வு இடம்பெற்றது.
இச்செயலமர்வின் வளவாளராக காரைதீவு சண்முகா மகா
வித்தியாலய பரதநாட்டிய ஆசிரியை பிரதீபா மதிவதனன் அவர்கள்
கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கினார்.
0 comments :
Post a Comment