அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வெண்டும்!



-அரச துறை சார்ந்த உயரதிகாரிகள் கோரிக்கை-
சலீம் றமீஸ்-
ட்டாளைச்சேனை கோணாவத்தை அபிவிருத்திக் குழுவின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவும் அதன் தலைவர் ஜனாப் எம்.எஸ்.எம்.பைறூஸ் அதிபர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது இப்பிராந்தியத்தில் உள்ள அரச துறைசார்ந்த உயரதிகாரிகளும்; கலந்து கொண்டது முக்கிய அம்சமாகும். இதன்போதே உயரதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு முக்கியத்துவம்; வாய்ந்த அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை எதிர்காலத்தில் அழகுபடுத்தி பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம், ஆற்றின் இரு மருங்கிலும் ஆற்றுக்கு சொந்தமான காணியை சவீகரிக்கப்படுவதை நிறுத்துவதுடன், அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தல் தொடர்பாகவும் கோணாவத்தை அபிவிருத்திக்கும் ஏனைய சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்ற அட்டாளைச்சேனை கோணாவத்தை அபிவிருத்திக் குழு ஆற்றிவரும் பங்களிப்புக்கு நன்றிகளையும் வாழ்துக்களையும் இங்கு கலந்து கொண்ட துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை பாதுகாத்து, அக் கோணாவத்தை ஆற்றின் பகுதிகள் பலரினால் சுவிகரிக்கப்படுவதை தடுத்து அதனை அழகுபடுத்தி ஆயிரக்கணக்கான வேளாண்மை காணிகளின் வடிச்சல் திட்டத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலின்கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு செயல்பட்டு வருவதுடன், சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்ஒன்றுகூடலில், அட்டானைச்சேனை கோணாவத்தை அபிவிருத்திக் குழவின் ஸ்தாபகரும் போசகரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அப்துல் ஸாபீர், உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹிஜா முஸாபீர், அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி விவச்சந்திரன், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் சட்டத்தரணி எஸ்.எல்.எம்.ஹனிபா, ஓய்வு பெற்ற திட்டமிடல் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஐ.எல். தௌபீக், அட்டாளைச்சேனை பெரிய ஜூம் ஆப் பள்ளிவாயல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜூனைதீன், அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ், அம்பாரை மாவட்ட ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் அல்-ஹாஜ் ஏ.பி.எம். சரீப், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நளீல், சம்சுதீன் (DO) உட்பட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கோணாவத்தை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :