காரைதீவில் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீரதிசாநாயக்க
வி.ரி.சகாதேவராஜா-வரவுசெலவுத்திட்டத்தின்படி பிரதேசரீதியாக 40வீத ஒதுக்கீடு வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கலாம்.எனினும் 100வீதம்கூட ஒதுக்கமுடியும்.எனவே இனமத கட்சிபேதமின்றி வறியவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முன்னுரிமை வழங்குங்கள்.
இவ்வாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு வனவளஅபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீரதிசாநாயக்க காரைதீவில் தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்டம் -2022 ஆண்டிற்கான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று(21)செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
அங்கு காரைதீவுப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் என்ற ரீதியில் தலைமை வகித்துரையாற்றுகையில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
ஜனாதிபதி கோட்டபாய வந்ததால் கொரோனா வந்ததாக பலரும் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் சர்வதேச ரீதியில் எல்லாஇடங்களிலும் யார் வந்தாலும் கொரோனா வந்திருக்கும். அதனை அவர்கள் எதிர்கொண்டேயாகவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் 3ஆயிரம் கோடிருபா வீதி அபிவிருத்தி வேலைகளுக்கும் ஆயிரம்கோடிருபா குடிநீர் வழங்கும் திட்டத்திற்கும் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது.நிதியைபாவித்து வறியவர்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளியுங்கள்.அவர்கள் எந்தக்கட்சியானாலும் கட்சிபேதமின்றி உதவுங்கள்.
முழுஆண்டுக்கும் வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டாலும் காலாண்டை மையமாகவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 70ஆண்டு காலத்தில் கடந்த அரசங்களினால் ஒதுக்கப்பட்ட நிதிகள் சரியாக பொதுமக்களை கணிசமானளவு சென்றடையவில்லை என்கது எனது கருத்து.
எனவே, முடியுமானவரை எந்த ஒதுக்கீடு என்றாலும் மக்களை நேரடியாகச்சென்றடையவேண்டும்.கிராமிய உற்பத்திபொருளாதாரத்தை மையமாகவைத்து செயற்படவேண்டும்.
திறைசேரிக்கு பொதுமக்கள் நேரடியாக முறைப்பாடுசெய்யமுடியும். அதற்கு மாவட்ட செயலகம் வகைசெய்யவேண்டும். பிரதேசரீதியாக பலவேலைத்திட்டங்கள் மாவட்டசெயலகமூடாக செயற்படுத்தப்படவுள்ளது.எனவே அனைவரது ஒத்துழைப்புடன் வருடஆரம்பத்திலிருந்தே சிறப்பாக முன்னெடுக்க திட்டமிடவேண்டும்.
பிரதேசசெயலக பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனகுமாரும் கலந்துசிறப்பித்தார். துறைசார்ந்து பிரச்சினைகள் தேவைப்பாடுகளை அந்தந்த திணைக்கள தலைவர்கள் முன்மொழிந்தனர்.
0 comments :
Post a Comment